அயோத்தியில் இருந்து ஜோடோ பாதயாத்திரை.. ராகுல் காந்தி திட்டம்..!

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (13:17 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதை யாத்திரை நடத்திய நிலையில் அடுத்த கட்ட பாதயாத்திரையை அயோத்தியில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மக்களவைத் தேர்தல் வரும்  2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம் பி ராகுல் காந்தி இரண்டாம் கட்ட பாரத் ஜோடா யாத்திரையை குஜராத்தில் இருந்து தொடங்குவார் என்று கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி அயோத்தி சென்று ராமர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து யாத்திரையை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்