3வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது வதந்தியா?

திங்கள், 21 ஜூன் 2021 (10:03 IST)
கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம் என தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.  
 
கொரோனா முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பையும், அதிக பலியையும் ஏற்படுத்தி உள்ளது. 2வது அலையே இப்போது தான் கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் 3வது அலையை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் எனினும் கொரோனா 3வது அலையை எதிர்க்கொள்ள விழிப்புடன் இருக்குமாறும் தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
 
இதற்கு முன்னதாக, இந்தியாவிலோ அல்லது சர்வதேச அளவிலோ கொரோனாவின் அடுத்த அலையில் குழந்தைகளே தீவிரமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்