ஆர்.கே.நகரில் எகிறும் வாக்குப்பதிவு : 41.06 சதவீத வாக்குகள் பதிவு

வியாழன், 21 டிசம்பர் 2017 (13:30 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

 
ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொகுதி முழுவதிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
 
மொத்தம் 258 வாக்குச்சாவடி மையங்களில் 1600 மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதேபோல், வாக்களித்தவர்களுக்கு எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்ற ரசீதும் கொடுக்கப்படுகிறது. 
 
இன்று ஆர்.கேநகர் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவின் சதவீதம் அதிகம் இருக்கும் என்று கருதப்படுகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கும் முன்னதாகவே வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 41.06 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் நேரம் செல்ல செல்ல வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்