ப்ளு வேல் கேம் பகிர்ந்தாலே கடும் தண்டனை: உயர்நீதி மன்றம் உத்தரவு!!

திங்கள், 4 செப்டம்பர் 2017 (12:09 IST)
ஆளைக்கொல்லும் ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டினால் இந்தியாவில் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். 


 
 
இந்நிலையில், ப்ளூ வேல் கேமை பகிர்ந்தாலே கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தவிட்டுள்ளது.
 
ப்ளூ வேல் கேம் முதலில் ரஷ்யாவில் துவங்கப்பட்டது. பின்னர் வரலாகி பரவி தற்போது இந்தியாவில் தனது தாக்கத்தை காட்டி வருகிறது.
 
சமீபத்தில் தமிழகத்தில் மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற பள்ளி மாணவன் ப்ளு வேல் கேம் விளையாடி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 
 
எனவே, உயர்நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக விசாரணை நடத்தியது. விசாரணையி, ப்ளூ வேல் கேமை பகிர்ந்தாலும் அல்லது கேமை விளையாடும் சூழலை ஏற்படுத்தினாலும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்