பொன்முடிக்கு தண்டனை! நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரிப்பு! - ராமதாஸ்

வியாழன், 21 டிசம்பர் 2023 (17:49 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


 
பொன்முடிக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பொன்முடி தண்டனை குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த  வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும்,  ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது.  உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பு பொதுவாழ்க்கையில்  இருப்பவர்களுக்கு  ஒரு பாடம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு எனவும் அந்த நோக்கத்தை நிறைவேற்ற  சென்னை உயர்நீதிமன்றத்தின்  இந்தத் தீர்ப்பு துணை செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்