புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்திமா காலணியை சேர்ந்தவர் சதீஷ்குமார். அந்த பகுதியில் உள்ள ஐடிஐ-யில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு தனது தந்தையோடு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது தந்தையும், அண்ணனும் அவரை திட்டியதோடு, அடித்ததாகவும் தெரிகிறது. இதனால் சதீஷ்குமார் கோபமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் சதீஷ்குமாரின் நண்பர்கள் சிலருக்கு வாட்ஸப்பில் ஒரு போஸ்டரை அனுப்பியுள்ளார் சதீஷ்குமார். அது அவருக்கு அவரே இரங்கல் தெரிவித்து தயாரித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் சதீஷ்குமாரின் பெற்றோருக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளனர். அன்று முழுவதும் பலரும் தேடியும் சதீஷ்குமார் கிடைக்கவில்லை. இந்நிலையில் மறுநாள் காலை பலாமரம் ஒன்றில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.