புதுக்கோட்டை கீழராஜ வீதியில் பிரசித்தி பெற்ற சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை அமாவாசை அன்று பக்தர்கள் திரளாக வருவது வழக்கம். இந்நிலையில் அந்த கோவிலுக்கு பிச்சை எடுக்க வரும் பிச்சைக்காரர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் பிச்சையெடுக்க தலா ரூ.2,000 பெற்றுள்ளார், அதேபோல தர்ப்பணம் கொடுக்கும் புரோகிதர்களிடமும் ரூ.1,600 பெற்றுள்ளார்.
இதுகுறித்து பிச்சைக்காரர்கள் அளித்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அறநிலையத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்திராணியிடம் மன்னிப்பு கடிதம் மட்டும் எழுதி வாங்கி கொண்டு விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.