புதுவையில் நாராயணசாமி போட்டி இல்லையா? 14 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல்!

செவ்வாய், 16 மார்ச் 2021 (21:43 IST)
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் அதே நாளில்தான் புதுவையிலும் தேர்தல் நடைபெறுகிறது என்பதும் இந்த தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்பதும் தெரிந்ததே 
 
அதேபோல அதிமுக பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஒருபக்கமும் பாமக தனித்துப் போட்டியிடுவது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் 14 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது
 
இந்த பட்டியலில் முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமியின் பெயர் இல்லை என்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து வரும் தேர்தலில் நாராயணசாமி போட்டியிடுவது இல்லையா அல்லது அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் வருமா என்ற குழப்பத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளனர்
 
இந்தநிலையில் நாராயணசாமி மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் அவருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது அதனால் அவர் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்