புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது!

புதன், 28 டிசம்பர் 2022 (08:30 IST)
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது!
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக இன்று பந்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் அவரை கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பாரதி வீதியில் உள்ள அன்பழகன் வீட்டில் மாநில செயலாளர் அன்பழகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் நிலையில் திமுக புகாரின்பேரில் என்னை கைது செய்தது தவறு என்று அதிமுக புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்