குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்தே பொதுத்தேர்வு வினாத்தாள்கள்!!

புதன், 6 ஏப்ரல் 2022 (15:33 IST)
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். 
 
அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 6ல் தொடங்கி மே 30ல் முடிவடையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 5ல் தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 24ல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 9 தொடங்கி மே 31 வரை நடைபெறும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியும் வெளியாகும்.
 
இந்நிலையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என் தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்