தடுப்புகளை மீறி போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த போராட்டக்காரர்கள் மீது அவ்வை சண்முகம் சாலையில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால், அவ்வை சண்முகம் சாலை உட்பட மெரினாவை சுற்றி பதற்றம் நிலவுகிறது. மேலும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால், கோபம் கொண்டு கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் அதிகாதியின் மீது கல் பட்டு காயம் ஏற்ப்பட்டதால், போலிஸாரும், கண்ணீர் புகை குண்டு, கல் வீசி தாக்குதலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வை சண்முகம் சாலை, சென்னை மெரினா கடற்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது.