இந்நிலையில் அம்மு தனது மாமியார் மீனா மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை மாமியார் மீனா, மருமகள் அம்முவிடம் தனக்கு மீன் குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அம்மு, தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாமும் விஷம் அருந்தினார். ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் அம்முவின் குழந்தைகள் இறந்துவிட, அம்மு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மீன் குழம்புக்காக ஒரு குடும்பமே சீரழிந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.