இந்நிலையில் கனகதுர்கா என்பவரும் பிந்து என்பவரும் சபரிமலைக்கு சென்றுவிட்டு தன் வீட்டுக்கு வந்தபோது அவரது மாமியார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். பதிலுக்கு கனகதுர்காவும் மாமியாரை தாக்கியுள்ளார். அதன்பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது இருவரும் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.