சென்னை மெட்ரோ பயணிகளுக்கு அசத்தல் பரிசுகள்! – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

ஞாயிறு, 20 மார்ச் 2022 (13:48 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு குலுக்கல் திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலிலில் பயணிகள் பலர் பயணித்து வரும் நிலையில் பயணிகளை ஊக்கப்படுத்தவும், புதிதாக பயணிப்பவர்களை அதிகப்படுத்தும் விதமாகவும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த பரிசு திட்டங்கள் 21.03.2022 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் பரிசு குறித்த விவரங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

pic.twitter.com/7ATrxIn9hx

— Chennai Metro Rail (@cmrlofficial) March 20, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்