கனியாமூர் பள்ளிக்கு தீ: 1500 மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், டிசி தீயில் சேதம்!

திங்கள், 18 ஜூலை 2022 (08:04 IST)
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உள்பட 1500க்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் தீயில் எரிந்து நாசமான தகவல் வெளியாகியுள்ளது
 
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பள்ளி வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மேலும் பள்ளியில் உள்ள முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையிலும் தீ வைக்கப்பட்டது.
 
இதில் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் தீயில் எரிந்து நாசமானதாக தெரிகிறது. குறிப்பாக இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்க தயாராக இருந்த மதிப்பெண் சான்றிதழ்களும் தீயில் எரிந்து சாம்பலான தகவல் வெளியாகியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்