தமிழில் 100க்கு 100 மதிப்பெண் வாங்கிய மாணவி, பள்ளியின் பெயரை சொல்லாதது ஏன்: எஸ்வி சேகர்

வெள்ளி, 24 ஜூன் 2022 (19:53 IST)
தமிழகத்தில் முதல் முறையாக ஒரு மாணவி தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய நிலையில் அந்த மாணவி படித்த பள்ளியின் பெயரை மறைத்தது ஏன் என்ற கேள்வியை நடிகர் எஸ்வி சேகர் எழுப்பியுள்ளார்
 
தமிழகத்தில் முதல்முறையாக தமிழ் மொழி பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை செய்துள்ளார். தமிழ் படத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவியை துர்காவுக்கு ஆசிரியர்கள் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர் என செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன 
 
ஆனால் ஒரு ஊடகத்தில் கூட அந்த அந்த மாணவி படித்த பள்ளியின் பெயரை வெளியிடவில்லை. அந்த பள்ளியின் பெயர் ’காஞ்சி காமகோடி சங்கரா பள்ளி என எஸ் வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்