40 ரூபா தயிருக்கு ரூ.15,004 பறிகொடுத்த ஹோட்டல் ஓனர்...

புதன், 10 ஜூலை 2019 (13:57 IST)
தனியார் ஹோட்டல் ஒன்று தயிருக்கு ஜிஎஸ்டி மற்றும் பார்சல் சார்ஜ் போட்டதால், நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் விதித்துள்ளது. 
 
பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மகராஜன் என்பவர் தயிர் வாங்கியுள்ளார். அவர் வாங்கிய தயிருக்கு, ரூ.44 பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தயிர் விலை ரூ.40, ஜிஎஸ்டி ரூ.2, பார்சல் சார்ஜ் ரூ.2. 
 
இதனால் கடுப்பான மகராஜன் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்து அந்த தனியார் ஹோட்டல் வாடிக்கையாளருக்கு மன உலைச்சல் ஏற்படுத்தியதாக தெரிவித்தது. 
 
இதோடு வாடிக்கையாளருக்கு மன உலச்சை ஏற்படுத்தியற்காக ரூ.10,000, வாடிக்கையாளரின் வழக்கு செலவுக்கு ரூ.5,000, கூடுதலாக வசூலிக்கப்பட்ட் ரூ.4 ஆகிவற்றி சேர்த்து மொத்தம் ரூ.15,004 அபராதமாக ஹோட்டல் ஓனருக்கு விதித்தது. 
 
மேலும், ஒரு மாதத்தில் அபராத தொகையை வழங்க வேண்டும் இல்லைபென்றால் 6% வட்டி விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்