அதில், எஸ்.எஸ்.எல்.சி கல்வித் தகுதியாக உள்ள பணிகளுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதியாக உள்ள பணியிடங்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வியை தகுதியாக நிர்ணயித்திருக்கும் படிப்புகளுக்கு தமிழிலேயே படித்திருக்க வேண்டும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும், 10, முதல் 12 ஆம் வகுப்பு பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழில் படித்திருக்க வேண்டும் என்று சட்டத்திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.