இலவச பிரியாணி, பக்கோடா விநியோகம் ...அலைமோதிய மக்கள் கூட்டம் !

திங்கள், 16 மார்ச் 2020 (15:11 IST)
இலவச பிரியாணி, பக்கோடா விநியோகம் ...அலைமோதிய மக்கள் கூட்டம் !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது. குறிப்பாக தியேட்டர்கள் மூட உத்தரவிட்டுள்ளது, ஐபில் போட்டிகளுக்கு  வரும் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. 
 
இந்நிலையில், மக்களிடம் கோழி சாப்பிடுவதால்தான் கொரோனா வைரஸ் பரவி வருவதாக வதந்தியை கிளப்பிவிட மக்கள் கோழியை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி இறைச்சியின் விலை குறைந்து வருகிறது. 
 
இந்நிலையில் சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி விநியோகிக்கப்பட்டது. இதனை மக்கள் கூட்டமாக வந்து போட்டி போட்டு வாங்கி சென்று சாப்பிட்டனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்