பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்திப்பு.. ரூ.12,300 கோடி நிவாரண தொகை கோரிக்கை..!

புதன், 20 டிசம்பர் 2023 (07:20 IST)
தமிழக முதல்வர் நேற்று டெல்லி சென்ற நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.12,300 கோடி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்  தற்போது மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் , அதன்பின் பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண நிதி குறித்த கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து விளக்கிய முதல்வர்  சென்னை உள்பட நான்கு மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக 12,300 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 மேலும் நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் பிரதமரிடம் அவர் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்