நாளை தமிழகம் வரும் குடியரசு தலைவர்! – 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில்!

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (09:20 IST)
நாளை தமிழகம் வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளை முதல் 5 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். ஆகஸ்டு 2 மாலை தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3ம் தேதி முதல் நீலகிரியில் தங்கியிருந்து 6ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

நாளை குடியரசு தலைவர் தமிழகம் வரும் நிலையில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சட்டப்பேரவையில் கருணாநிதி பட திறப்பு விழாவிற்கு அவர் செல்ல உள்ள நிலையில் இன்று முதலாக சென்னையில் 7 ஆயிரம் போலீஸார் தீவிரமான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வருகையின்போது போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்