தேமுதிக வின் கொடி அறிமுக நாள் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆந்திரா, டெல்லி போன்ற மாநிலங்களில் நம் கேப்டனின் கொள்கைகளை பின்பற்றியவர்கள் எல்லாம் வெற்றி பெற்று முதல்வராகி விட்டனர்.
அவரது பேச்சில்’ பிற மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருப்பவர்கள் பலரும், கேப்டனின் பாலிசியைப் பின்பற்றியவர்கள்தான். வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்ற வாக்குறுதியை விஜயகாந்த் அளித்தார். அதை சொல்லிதான் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகியுள்ளார். கெஜ்ரிவாலும் கேப்டனின் கொள்கையான லஞ்சம், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என சொல்லிதான் டெல்லியில் ஆட்சியைப் பிடித்துள்ளார்.’ எனக் கூறினார்.