கொரோனா 3வது அலை மிக மோசம் - டெல்லி சுகாதார அமைச்சர்!

திங்கள், 9 நவம்பர் 2020 (14:43 IST)
இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இதுவரை இல்லாத வகையில் மிக மோசமாக உள்ளது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் 45,903 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 85,53,657 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,26,611 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 79,17,373 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,09,673 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இதுவரை இல்லாத வகையில் மிக மோசமாக உள்ளது என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் திருவிழா காலம் இது என்பதால் மக்கள் நெரிசல் அதிகமாகவே பல இடங்களில் காணப்படுவதாகவும், அதனுடன் நகரில் மோசமாகி வரும் காற்று மாசுபாடு வைரஸ் பரவலுக்கு காரணமாகி வருவதாக அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகிறார்.
 
டெல்லியில் முதல் முறையாக ஒரே நாளில் 7,000 பேருக்கு ஒரே நாளில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாகவும் செய்தி கூறுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்