முதகெலும்பு இல்லாத தமிழக அரசு... பதவிக்காக நடனமாடுவதில் பிஸியாக உள்ளதா? விளாசிய பிரகாஷ்ராஜ்

புதன், 23 மே 2018 (16:41 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தை அதிர வைத்தது. இதுகுறித்து பலரும் அரசுக்கு எதிரான தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 
 
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர், போராடும் குடிமக்களை கொலை செய்வது.. தமிழகத்தின் தொலை நோக்கு பார்வை வெட்கக்கேடு. முதகெலும்பு இல்லாத அரசு. போராட்ட மக்களின் அழுகை கேட்கவில்லையா?? பதவிக்காக மத்திய அரசின் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதில் பிஸியாக உள்ளதா என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்