சிவகங்கை மாவட்ட 20 கிராமங்களில் தொடர் மின்வெட்டு: மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு..!

செவ்வாய், 18 ஜூலை 2023 (09:03 IST)
சிவகங்கை மாவட்டத்தில் 20 கிராமங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். 
 
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை, எம்.கரிசல்குளம், வன்னிக்குடி, சோமாத்தூர், சின்ன கண்ணனூர், புலிக்குளம், மானங்காத்தான் உள்ளிட்ட 200 கிராமங்களுக்கு அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. 
 
இதனால் விவசாயிகள் பம்பு செட்டுகளை இயக்க முடியாமல் இருப்பதாகவும் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டுவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர் என்றும் வியாபாரம் உள்பட அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். 
 
எனவே சிவகங்கை மாவட்டத்தில் மின் வெட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் தொடர் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளீ வைக்க வேண்டும் என்றும் மின்வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் மின்வாரியத்துடன் இணைக்கப்பட்ட கிராமங்களை மானாமதுரை மின்வாரியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த இணைப்பு நடந்தவுடன் மின்வெட்டு குறைந்து விடும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்