மருத்துவர்கள் இன்றி பிரேதப் பரிசோதனை செய்த ஊழியர்கள் ! வைரலாகும் வீடியோ

வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (18:45 IST)
மருத்துவர்கள் இன்றி பிரேதப் பரிசோதனை செய்த ஊழியர்கள் ! வைரலாகும் வீடியோ

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு  அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் இல்லாமலேயே ஊழியர்கள் பிரேதப் பரிசோதனை செய்ததாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது. 
 
தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதியில் நிகழும் விபத்துகளில் இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும்.  இந்த நிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதி சமூக வலைதளங்களில் செல்போனில் எடுத்த வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. 
 
அதில், மருத்துவர்கள் இல்லாமலேயே  ஊழியர்களே சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்தனரா. இல்லை தற்கொலை செய்யப்பட்டனரா, கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்த உண்மையை அறிவதற்குத்தான் இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் மருத்துவர்கள் இல்லாமல் ஊழியர்கள் பரிசோதனை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்