எடப்பாடி பழனிசாமி பற்றி அறப்போர் இயக்கம் அவதூறாக பேச தடை!

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (15:23 IST)
முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பற்றி அறப்போர் இயக்கம் அவதூறாக பேச உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிசாமி தடைகோரியிருந்த நிலையில், எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது அரசின் கொள்கை, அதில், அறப்போர் இயக்கம் தலையிட முடியாது. 

ஊடகத்தில் வரும் செய்திகளின் அடிப்படையில் என் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதால், என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும்  நோக்கில் புகாரளிக்கப்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு புகாரளித்த அறப்போர் இயக்கத்தின் மீது ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு இபிஎஸ்  மான  நஷ்ட வழக்குத் தொடர்ந்திருந்தார்.
 

ALSO READ: திமுக கூட்டணி, எடப்பாடி கூட்டணி பலம் இழந்து வருகிறது.. டிடிவி தினகரன்
 
இந்த நிலையில், அறப்போர் இயக்கம் எடப்பாடி பழனிசாமி பற்றி பேச உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்