பாஜகவின் வளர்ச்சி அதிமுகவிற்கு நல்லதல்ல - பொன்னையன் வார்னிங்!

புதன், 1 ஜூன் 2022 (12:03 IST)
பாஜக அதிமுகவின் கூட்டணி கட்சிதான் என்றாலும் அதன் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல என்று முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தெரிவித்துள்ளார். 

 
புரட்சித் தலைவி பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையில் அதிமுக மூத்த தலைவரும் அக்கட்சி அமைப்பு செயலாளருமான பொன்னையன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது, 
 
பாஜக அதிமுகவின் கூட்டணி கட்சி தான் என்றாலும் பாஜகவின் வளர்ச்சி அதிமுகவுக்குகோ, தமிழ்நாட்டிற்கோ, திராவிடக் கொள்கைகளுக்கோ நல்ல தல்ல. காவிரி நதிநீர் முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக பாஜக இரட்டை வேடம் போடுகிறது. 
 
தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக் கூடாது என கர்நாட கமாநில பாஜக கூறிவரும் நிலையில், தமிழ்நாட்டு பாஜக அதை வேடிக்கை பார்த்து வருகிறது. அதிமுகவின் ஐடி விங், பாஜகவை சமூக வலைதளங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டும். அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரச்சாரத்தை பாஜக மறைமுகமாக செய்து வருகிறது. 
 
பாஜகவிடம் அதிமுக மிகக் கவனமாக இருக்க வேண்டும். பாஜக தமிழ்நாட்டிற்கு ஆதரவாகத் தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டால் மட்டுமே, இங்கு வளர முடியும் என்று கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்