அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!

Siva

வெள்ளி, 26 ஜூலை 2024 (19:04 IST)
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் குவாரிகளில் மண் எடுப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் பொன்முடி மேல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் பொன்முடி யிடம் விசாரணை செய்யப்பட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இருவருக்கும் சொந்தமான ரூ.14.21 புள்ளி கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அமலாக்கத்துறை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்