பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் எப்போது? தொழில்நுட்பக்கல்வி ஆணையரகம் தகவல்..!

Siva

செவ்வாய், 9 ஜூலை 2024 (09:52 IST)
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

பி.இ, பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு மே 6ஆம் தேதி  வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் அதன் பின்னர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 13ஆம் தேதி வரை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க  கால அவகாசம் நீடிக்கப்பட்டது.

இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்புக்காக இணைய வழியில் விண்ணப்பித்துள்ளனர். இதனை அடுத்து கட்டணம் செலுத்தி அனைத்து உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி சமவாய்ப்பு எண் இணைவழியில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும் பணி முடிவடைந்த நிலையில் தற்போது நாளை தரவரிசை பட்டியல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்ப கல்வி ஆணையரகத்தில் தரவரிசை பட்டியலை வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்