ஜனவரி 3 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு

சனி, 18 டிசம்பர் 2021 (01:44 IST)
ஜனவரி 3 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்துள்ளது.

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அறிவித்து வருகிறார். இதற்காக அவர் பல விருதுகள் பெற்றுள்ளார். சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி முதல்வரின் பணியைப் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், அடுத்த மாதம் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல்21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு அனைத்து ரேசன் கடைகளிலும், பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்