பொங்கல் பரிசுத் தொகுப்பு.. டோக்கன் பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Mahendran

புதன், 10 ஜனவரி 2024 (13:28 IST)
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல்  பணம் மற்றும் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டோக்கன் பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது  பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்றும் அது மட்டும் இன்றி  ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது 
 
 இதனை அடுத்து கடந்த சில நாட்களாக இதற்கான டோக்கன் வழங்கும் பணிகளும் நடந்து வந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் கிடைக்கப்பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் தொகையை ஜன.13, 14 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்