அதில், அதிமுக அரசை கடுமையாக சாடிய அவர் . பொள்ளாச்சி சம்பவ ஆடியோவைக் கேட்டது முதல் மனசு பதறுது. அந்தப் பொண்ணோட குரலில் இருந்த அதிர்ச்சி, பயம் , தவிப்பு திரும்பத் திரும்ப காதுல கேட்குது. நிர்பயாவுக்கு நடந்த கொடுமைக்கு எதிராக ஊர் உலகமே ஒன்றாக திரண்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொடூரக் குற்றங்களாக கருதப்பட்டு உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்" என்றார். அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் இந்த அரசு எப்படி இவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறது. என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து புரட்சித்தலைவி நமது அம்மா நாளிதழில் "காமஹாசனும் கதாகாலட்சேபமும்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், கமல்ஹாசன் போன்றோர் அதிமுக மீது வன்மம் கொண்டு உள்நோக்கம் கற்பிக்க வெறிபிடித்து அலைவதாக குறிப்பிட்டுள்ளது.