தமிழக வெற்றிக்கழகம், இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும் என நேற்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்த நிலையில் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் காந்தி மீது வையுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, செல்வப்பெருந்தகை விஜய்க்கு அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவு செய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என்று அறிவுரை கூறுவது தான் எனது கடமை என்று தெரிவித்தார். மேலும் பாஜக யாரையும் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை, தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.