அடங்காமல் சுற்றிய மக்கள்: அதிரடி நடவடிக்கையில் போலீஸ்! – வாகனங்கள் பறிமுதல்!

வெள்ளி, 19 ஜூன் 2020 (10:17 IST)
கொரோனா பாதிப்பினால் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்தவர்களை போலீஸார் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகல் அதிகரித்து வருகிறது, இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு இந்த பகுதிகளில் இன்று முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு கடுமையான முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு ஊரடங்கு தொடங்கிய நிலையில் அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் போடப்பட்டு பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் வழக்கமான நாட்களை போலவே மக்கல் பலர் காரணமின்றி வாகனங்களில் சுற்றி திரிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து போலீஸார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அதில் காலாவதியான பாஸ் வைத்திருந்தவர்கள், காரணமின்றி வெளியே வந்தவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காலை முதலே சுமார் 100க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்