கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் நல்லான் தோட்டம் என்ற பகுதியில் டெல்லியை சேர்ந்த ஜெயின் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் சொகுசு பங்களாவும், 20 ஆயிரம் சதுர அடியில் குடோனும் அமைந்துள்ளது.
அந்த குடோனில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, சாந்தி பாக்கு உள்ளிட்ட போதை பொருட்கள் தயார் செய்யப்படுவதாக கோவை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.