ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்.. மாமல்லபுரம் அருகே பரபரப்பு சம்பவம்..!

Mahendran

வெள்ளி, 28 ஜூன் 2024 (12:34 IST)
செங்கல்பட்டு அருகே மாமல்லபுரத்தில் நீண்ட நாளாக தேடிக்கொண்டிருந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியில் சுட்டு பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சத்யா, பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 இதையடுத்து போலீஸ் குழுவினர் அந்த பகுதிக்கு சென்று ரவுடியை சுற்றி வளைத்த நிலையில் போலீசாரை ரவுடி சத்யா துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது, இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக ரவுடி சத்யாவை சுட்டதில் சத்யாவின் இடது காலில் குண்டு பாய்ந்ததாகவும் இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பட்ட பகலில் போலீசாரை நோக்கி ரவுடி சத்யா சுட்டதும், ரவுடியை நோக்கி போலீசாரை சுட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்