கஞ்சா போதையில் இளம்பெண் வன்கொடுமை! – முதல்வருக்கு ராமதாஸ் விடுத்த வேண்டுகோள்!

புதன், 10 ஆகஸ்ட் 2022 (11:28 IST)
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அவருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் போதை பொருட்களை அடியோடு ஒழிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினரோடு ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், பிற மாநிலங்களில் இருந்து போதைப்பொருள் தமிழகத்திற்கு வருவதை தடுக்கவும் அவர் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிலையில் போதை பொருளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மகிழுந்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இளம் பெண்ணை கடத்தி சீரழித்த நால்வரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போது கூட அவர்களின் போதை தெளியவில்லை எனத் தெரிகிறது. போதை எத்தகைய சமூகக் குற்றங்களுக்கு வழி வகுக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்!

போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், போதைப்பொருட்களால் இத்தகைய குற்றங்கள் நிகழ்வதையும் கருத்தில் கொண்டு போதை ஒழிப்பு உத்திகளை வகுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்