இந்நிலையில் நீட் தேர்வில் மோசடி நடப்பதாக குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “நீட் தேர்வின் அடிப்படையிலான அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலில் 9,19,400-க்கும் பிந்தைய இடத்தைப் பிடித்த மாணவருக்கு தமிழ்நாட்டிலும், 9,17,875வது இடத்தைப் பிடித்தவருக்கு இராஜஸ்தானிலும், எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் “மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லாமல் பணத்தின் அடிப்படையிலேயே இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படித் தான் நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்தப்படுகிறதா? என்ற வினா எழுகிறது” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.