யோகாசனம் உலகிற்கு இந்தியா தந்த கொடை: அன்புமணி ராமதாஸ்

செவ்வாய், 21 ஜூன் 2022 (13:48 IST)
இன்று உலகம் முழுவதும் உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி மைசூரிலுள்ள நிகழ்ச்சி ஒன்றில் யோகா செய்து யோகா தினத்தை கடைபிடித்தார்
 
தமிழகத்தின் பல இடங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யோகாசனம் உலகிற்கு இந்தியா தந்த கொடை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
உலக யோகாசன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. யோகாசனம் உலகிற்கு இந்தியா தந்த கொடை. தீரா நோய்களை கட்டுப்படுத்த யோகா அருமருந்து. இதன் பயனை அனைவரும் அனுபவிக்க வேண்டும். அதற்காக யோகாசனத்தை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும்! 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்