மத்திய அரசை கண்டித்து காண்டான ராமதாஸ்!

சனி, 28 டிசம்பர் 2019 (14:13 IST)
ரயில் கட்டண விலை உயர்வை எதிர்த்து பாமக தலைவர் ராமதாஸ் மத்திய அரசை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
ரயில் கட்டணம் விலை உயர்த்தப்படும் என செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், ரயில்வே வாரியத் தலைவர் விகே யாதவ் கட்டண உயர்வு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
 
இந்தியாவில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போதைய நிலவரப்படி பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும் சரக்கு விதத்தில் 6.6 சதவீதம் உயர்த்தப்பட்டது. ரயில்வே துறையின் உள்ளிட்டு செலவுகள் அதிகரித்து வருவதால், அதை ஈடுகட்ட கட்டண உயர்வு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில் ரயில் கட்டண விலை உயர்வை கண்டித்து பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆம், ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 
இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கும். இவ்வளவு அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க ஏழை, நடுத்தர மக்கள் முன்வர மாட்டார்கள்.
 
இது துறையின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதைத் தவிர வீழ்ச்சிக்குத் தான் வழிவகுக்கும். 2002 முதல் 2012 வரையிலான காலத்தில் பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக, ஒருமுறை தொடர்வண்டி கட்டணம் அடையாளமாக குறைக்கப்பட்டது. 
 
அதற்கு பிறகு 7 ஆண்டுகளில் தொடர்வண்டி கட்டணம் 4 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. 4 முறைகளிலும் சேர்த்து எந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதோ, அதே அளவுக்கு கட்டண உயர்வை ஒரே முறையில் நடைமுறைப்படுத்த முயல்வது எந்த வகையிலும் நியாயமல்லை என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்