இரு விவாதங்களில் கலந்து கொண்ட அவர், எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை. மேலும் எந்த ஒரு தனி நபர் மசோதாவையும் அவர் கொண்டு வரவில்லை. கலந்துகொண்ட நாட்களிலும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது.
மேலும் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்திய பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாமக செய்தித்தொடர்பாளர் கே.பாலு, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை அலுவலகத்துக்கு உண்மையான தகவல்களை மறைத்ததை சுட்டிக்காட்டவே பாமகவினர் அங்கு சென்றதாக தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா தரப்பிலும் தாக்குதல் குறித்து எந்த புகாரும் எழுப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.