அன்புமணி மாநிலங்களவையில் என்னென்ன செய்தார்? லிஸ்ட் போட்ட பாமக!

வியாழன், 26 டிசம்பர் 2019 (16:20 IST)
மாநிலங்களவை உறுப்பினராக பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் இதுவரை என்னென்ன செய்தார் என லிஸ்ட் போட்டுள்ளது பாமக தரப்பு. 
 
பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மக்களவைத் தேர்தலில் தோற்றதை அடுத்து மாநிலங்களவை உறுப்பினராக அதிமுக கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இருமுறை நாடாளுமன்ற அவைகள் கூடியுள்ளது. இதில் அவர் 15 சதவீதத்துக்கும் குறைவான நாட்கள் மட்டுவே அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார். 
 
இரு விவாதங்களில் கலந்து கொண்ட அவர், எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை. மேலும் எந்த ஒரு தனி நபர் மசோதாவையும் அவர் கொண்டு வரவில்லை என செய்திகள் பத்திரிக்கையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாமக செய்திதொடர்பாளர் கே.பாலு, மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி என்னென்ன செய்தார் பட்டியளிட்டுள்ளார். அவை பின்வருமாறு... 
மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் மட்டும் புவிவெப்பமயமாதல், காவிரி - கோதாவரி இணைப்பு, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, உயர்கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகிய நான்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். 
 
அன்புமணி எழுப்பிய சில பிரச்சினைகளுக்காக அவரை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் பாராட்டியதுடன், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை என்ற அவரது கோரிக்கையை கவனத்தில் கொள்ளும்படி மத்திய அரசுக்கும் பரிந்துரைத்தார். அதுமட்டுமின்றி, அவர் 10 வினாக்களை எழுப்பியுள்ளார்.
 
இவற்றில் 4 வினாக்களுக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, கூட்டத்தொடர் முடிவடைந்து விட்டதால் மீதமுள்ள வினாக்களுக்கு விடையளிக்க முடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது. இவ்விவரங்கள் மாநிலங்களவை இணையதளத்தில் உள்ளன என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்