நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தவே, விஜய் புகைபிடிக்கும் காட்சியை போஸ்டரில் இருந்து நீக்க வேண்டும் என சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த போஸ்டரை நீக்கி விட்டனர்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாமகவினர் டிவிட்டரில் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் ‘குடிசை கொளுத்தி பாமக’ என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி, பாமகவிற்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்தனர். இதனால், அந்த ஹேஸ்டிக் டிரெண்டிங்கில் வந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘சிகரெட் கொளுத்தி விஜய்’ என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ஏராளமான பாமகவினர் மற்றும் அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக டிவிட் போட தற்போது ‘சிகரெட் கொளுத்தி விஜய்’ என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடத்தில் இருக்கிறது.