கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துகொண்ட பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா எம்.பி பதவி ஒப்பந்தம் வைத்துக்கொண்டது. அந்த அடிப்படையில் அதிமுக பெருவாரியாக மக்களவைத் தொகுதியில் தோற்றாலும் கூட பாமகவுக்கு 1 ராஜ்ய சபாவை கொடுத்துள்ளது. பாமக சார்பில் அன்புமணிக்காகவே இப்பதவியை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுள்ளதாகவும் யூகங்கள் பரப்பட்டது.
இதனைடயடுத்து மாநிலங்களவைக்கு அதிமுக மற்றும் திமுக ஆகிய இருகட்சிகளின் சார்பில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ(நேற்று பதவி ஏற்றுகொண்டார்), சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் பதவியேற்றனர்.