சிலைக்கடத்தலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை.. அமைச்சர்கள் பேட்டி

வியாழன், 25 ஜூலை 2019 (18:30 IST)
சிலை கடத்தலில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அதிமுக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 

சிலை கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொன்மாணிக்கவேல் கடந்த சில மாதங்களாக சிலை கடத்தல் வழக்கு குறித்து விசாரணை செய்து வருகிறார். அவரது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்தார்.
 

அதாவது சிலை கடத்தலில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் பொன்மாணிக்கவேல் தெரிவித்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அந்த அமைச்சர்கள் சிலை  கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர். இது குறித்து, அதிமுக சார்பில், திண்டுக்கல் சினீவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகிய அமைச்சர்கள் இன்று செய்தியளர்களுக்கு பேட்டியளித்தனர். அந்த பேட்டியில், சிலை கடத்தலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தமிழக அரசின் மீதும், எங்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தவே பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்கள் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் வேலூர் தேர்தல் நெருங்கும் நிலையில், எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இவ்வாறு பொய் குற்றச்சாட்டுகளை வைக்கின்றன என்றும், சட்ட ரீதியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது குறிபிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்