இந்தியா வரும் போரிஸ் ஜான்சன்; தனுஷ்கோடியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

புதன், 24 மார்ச் 2021 (10:40 IST)
ஏப்ரல் மாதம் இந்துயா வரும் இங்கிலாந்து பிரதமர் தனுஷ்கோடி வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜனவரியில் இந்திய குடியரசு தினத்தில் இந்தியா வருவதாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக அந்த பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள தனுஷ்கோடி பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. முன்னதாக சீன அதிபரை மாமல்லபுரல் அழைத்து வந்த பிரதமர் மோடி தற்போது இங்கிலாந்து பிரதமரை தனுஷ்கோடி அழைத்து வர திட்டமுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்