19ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. சென்னை, மதுரை, திருச்சி செல்ல திட்டம்..!

Siva

புதன், 17 ஜனவரி 2024 (07:35 IST)
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வர இருப்பதாகவும் அப்போது அவர் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கிய நிலையில் இந்த போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார் 
 
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். ஜனவரி 19ஆம் தேதி இந்த போட்டி தொடங்க உள்ளது என்பதும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே இன்று 3வது டி20 ஆட்டம்: முழுமையான வெற்றி கிடைக்குமா?
 
சென்னையில் வரும் 19ஆம் தேதி கேலோ இந்தியா போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதன் பின் அவர் ஓய்வு எடுக்கிறார். மறுநாள் 20ஆம் தேதி திருச்சி செல்ல விருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
திருச்சியில் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி அதன் பின்னர் அங்கிருந்து மதுரை செல்வதாகவும் மதுரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் டெல்லி செல்ல இருப்ப தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்