ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்.! வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை.!!

Senthil Velan

செவ்வாய், 16 ஜனவரி 2024 (13:19 IST)
வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்கள் பற்றி விவாதித்துள்ளனர்.  எதிர்காலத்துக்கான திட்டங்கள் பற்றியும் ஆலோசனை செய்துள்ளனர். இந்த உரையாடல் பற்றி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
அதில், ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு நல்ல உரையாடலை நடத்தியதாகவும், இரு நாடுகளின் கூட்டுறவில் நிகழ்ந்துள்ள பல்வேறு சாதகமான முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்கால முயற்சிகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்கும் எண்ணத்தையும் பகிர்ந்துகொண்டோம் என்று கூறியுள்ளார்.

ALSO READ: கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு! இரு தரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு.!!
 
பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யாவின் தலைமை உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றி பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும், ரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்