பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் அஞ்சலை செலுத்தினர் என்பதும் அவர்களது புகழை பற்றி பேசினர் என்பதையும் பார்த்தோம்.
சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்.